News October 31, 2025
பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்டக்கூடாது: HC

<<18121841>>பள்ளிக்கரணை<<>> சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகளை அனுமதிக்கக்கூடாது என அதிமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை HC, SC உத்தரவை பின்பற்றாமல் கட்டுமானத்தை CMDA அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, குடியிருப்பு கட்டும் பணிகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தியது. இதற்கு, சதுப்பு நிலத்தின் எல்லையை தீர்மானிக்க ஆய்வு நடக்கிறது, 2 வாரங்களில் பணிகள் முடியும் என TN அரசு பதிலளித்துள்ளது.
Similar News
News November 1, 2025
ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம்: வெளியான தேதி

இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலை 6 ஆண்டுகளாக ஸ்மிருதி மந்தனா காதலித்து வருகிறார். இதனிடையே, விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக பலாஷ் அறிவித்தார் இந்நிலையில், இவர்களது திருமணம், நவ.20-ல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மிருதியின் சொந்த ஊரான MH-ன் சங்க்லியில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு திருமணம் செய்வாரா ஸ்மிருதி?
News November 1, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால், இன்று (நவ.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் முழுநேரம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க!

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் & மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் உறுதியாகியுள்ளது. `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல. மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆகவே, எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலையை மாற்ற வேண்டும்.


