News October 31, 2025
மத்திய அரசில் 2,623 பணியிடங்கள்.. முந்துங்க!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦வயது: 18- 24 ✦கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ITI, ஏதாவது ஒரு டிகிரி ✦தேர்ச்சி முறை: Merit List & Certificate Verification ✦சம்பளம்: ₹8,200- ₹12,300 வரை ✦முழு விவரங்களுக்கு <
Similar News
News November 1, 2025
அற்ப அரசியல் லாபத்திற்காக பேசும் PM மோடி: சீமான்

தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற PM மோடியின் பேச்சு, தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவினர் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக மோடி கூறியதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியை மோடி சுமத்தியுள்ளதாக சீமான் சாடியுள்ளார்.
News November 1, 2025
தினம் 2 முட்டை சாப்பிட்டால்…

*உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது முட்டை தான். வைட்டமின்கள் B5, B2, B12, B6, K, E, மற்றும் D, கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய நுண்சத்துகள் உள்ளன. *முட்டை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. *புரதமும், பிற சத்துகளும் நிறைந்திருந்தாலும் குறைவான கலோரி கொண்டது. *உடனடி ஆற்றலை கொடுக்கும். இதிலுள்ள லூட்டின், வைட்டமின் A சத்துகள் பார்வை திறனை அதிகரிக்கும்.
News November 1, 2025
LSG ஹெட் கோச் ஆகிறாரா யுவராஜ் சிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், IPL 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு DC, GT ஆகிய அணிகளுடனும் யுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் பிளேயராகவும் யுவராஜ் விளையாடியுள்ளார்.


