News October 31, 2025
இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்! WARNING

Cakes, chips, cookies, crackers, fried foods, margarine & ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் இந்தியர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில், இவ்வகை உணவுகளில் நிறைந்திருக்கும் Glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே!
Similar News
News November 1, 2025
பிளாஸ்டிக் பாட்டில்களை தவிருங்கள்: சித்தராமையா

பிளாஸ்டிக் பாட்டில்களை அரசு அலுவலகங்கள் & நிகழ்ச்சிகளில் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக CM சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை காக்கும் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். ‘Nandini Products’ என்ற உள்மாநில உற்பத்தி பொருள்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்திலும் மீண்டும் மஞ்சள் பை, அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
சாதி அவமானகரமானது: மாரி செல்வராஜ்

சாதி என்பது பெருமை அல்ல, அது அவமானகரமானது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், மாரியின் படங்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை உருவாக்கும் வண்ணம் உள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி பேசியுள்ள அவர், போஸ்டர் ஒட்டி சாதிப் பெருமை பேசலாம், ஆனால் நான் சாதிக்கு எதிராக பேசக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 1, 2025
நவம்பர் 1: வரலாற்றில் இன்று

*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
*1956 – கேரளா, ஆந்திரா, மைசூர் (கர்நாடகா) மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
*1956 -கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மெட்ராஸ் (தமிழ்நாடு) உடன் இணைந்தது.
*1959 – தியாகராஜ பாகவதர் நினைவுநாள்.
*1973 – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.
*1974 – VVS லக்ஷ்மன் பிறந்தநாள்.


