News October 31, 2025
கள்ளக்குறிச்சி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்
Similar News
News November 1, 2025
கள்ளக்குறிச்சி: ஹான்ஸ் கடத்திய பெண் கைது

கள்ளக்குறிச்சி: தி.அத்திப்பாக்கம் வழியாக நேற்று (அக்.31) அதிக அளவில் ஹான்ஸ் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஆற்கவாடி கிராமத்தை சேர்ந்த உத்திராம்பாள் (49) என்பவரை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் இருந்து சுமார் 36 கிலோ ஹான்ஸ் போதைப்பொருளை கைப்பற்றி, அவரை மணலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராமதாஸ் கைது செய்தார்.
News October 31, 2025
கள்ளக்குறிச்சி: நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி: வெள்ளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட ஆரம்பூண்டி, சேத்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் அரசு அனுமதின்றி பதுக்கி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என வானவர் வினோத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஒப்படைக்கும் நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர்கள் பெயர், முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
News October 31, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


