News October 31, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
குமரியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சரலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டிட ஒப்பந்தக்காரரான இவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கங்காதரன், சுகுமாரன், மனோஜ் பிரபாகர், தேவேந்திரன் ஆகிய 4 பேரை கோட்டாறு போலீசார் கைது செய்தனர். இவர்களில் கங்காதரன், மனோஜ் பிரபாகர், சுகுமாரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பரிந்துரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் .
News October 31, 2025
குமரி: ஒருவர் அடித்துக் கொலை

குமரி மாவட்டம் தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் சுடுகாடு ஓரத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் குமாரகோயில் அருகே பிரம்மபுரம் என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (35) என்ற டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News October 31, 2025
குமரி: 12th படித்தால் கிராமப்புற வங்கியில் வேலை உறுதி!

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <


