News October 31, 2025
பரமத்திவேலூர் அருகே தற்கொலை!

பரமத்திவேலூர் அருகே தன்னாசிகோவில்மேடு பகுதியைச் சேர்ந்த தனசீலன் (25) தினமும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலூர் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
Similar News
News November 1, 2025
நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர்!

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சுமன் அவர்கள் வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதலாகி சென்று விட்ட நிலையில், நாமக்கல் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக இன்று 31.10.2025 பொறுப்பேற்றுக் கொண்ட சரவணன் அவர்களை வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News November 1, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.31 நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி – 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 31, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (31.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


