News October 31, 2025
நத்தம் அருகே கோர விபத்து; ஒருவர் பலி

நத்தம் அருகே சமுத்திராபட்டி பகுதியில், கணித போட்டிக்காக பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோவில் அரசு பேருந்து மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து நைனம்மாள் (43) உயிரிழந்தார். மாணவர்கள் திவ்யஶ்ரீ, குகன் உள்ளிட்ட 8 பேர் மற்றும் ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் நத்தம், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (அக். 30) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படவுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்டோபர் 31) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தெரியாத நபர்களிடமிருந்து வரும் QR கோடுகளை ஸ்கேன் செய்யாமல், பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 31, 2025
திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <


