News October 31, 2025

தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 1, 2025

தர்மபுரி மாவட்டத்தில் 241 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

image

தர்மபுரி மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் 01/11/2025 இன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.31) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவலர் சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News November 1, 2025

தருமபுரியில் தாயுமானவர் திட்டம்

image

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!