News October 31, 2025

விழுப்புரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 1, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அக்.31 இரவு முதல் நவ.1 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

விழுப்புரம் – சென்னை மெமு ரயில் சேவை மாற்றம்

image

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் யார்டில் பணிகள் நடக்க உள்ளதால் தாம்பரம் – விழுப்புரத்திற்கு நவ.1, 2 ஆகிய தேதிகளில் காலை 9:45 மணிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் – சென்னை கடற்கரைக்கு நவ-1, 2 ஆகிய தேதிகளில் மதியம் 1:40 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் விழுப்புரம்- திண்டிவனம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 31, 2025

விழுப்புரம்: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!