News October 31, 2025
செங்கல்பட்டு: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்ட் நிறுவனம்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் உள்ள போர்டு தொழிற்சாலையில் மீண்டும் கார் எஞ்சின்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (அக்டோபர் 31) தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. ரூபாய் 3,250 கோடி மதிப்பீட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனத்தால் 1,000-திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.1) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை (நவ. 1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க*
News October 31, 2025
செங்கல்பட்டு காவல் துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல் துறை இன்று (அக்.31) வாகன ஓட்டிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓரத்தில் நிறுத்த வேண்டாம், மேலும் இரவு நேரங்களில் வண்டிகளை பார்க் செய்யும் போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது முக்கியமான எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.


