News October 31, 2025
தி.மலை: மனித மிருகத்துக்கு சிறை!

வந்தவாசி, பொன்னுாரை சேர்ந்தவர் விஜயகுமார் (25). 2021ல், +2 படித்து கொண்டிருந்த 17 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறி அவரை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது அறிந்த வந்தவாசி மகளிர் போலீசார், விஜய குமாரை போக்சோவில் கைது செய்தனர். இதன்படி விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தி.மலை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Similar News
News November 1, 2025
திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (31.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
திருவண்ணாமலை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட அட்டவணை

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நவம்பர் மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் கோட்ட அளவில் நடைபெற உள்ளன. வந்தவாசி – நவ.4ம் தேதி, செங்கம் நவ.6, போளுர் நவ.11, சேத்துப்பட்டு நவ.13, செய்யாறு நவ.18, திருவண்ணாமலை கிழக்கு நவ.20, ஆரணி நவ.25 , திருவண்ணாமலை மேற்கு நவ.27-ல் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் காலை 11 மணியளவில் நடைபெறும் என மின்துறை தெரிவித்துள்ளது.
News October 31, 2025
தி.மலை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <


