News October 31, 2025
கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

நெய்வேலி 17-வது வட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36). இவர் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில், கடலூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மணிகண்டனை கைது செய்தனர்.
Similar News
News October 31, 2025
கடலூரில் 2 உதவி ஆய்வாளர்கள் ஓய்வு

கடலூர் மாவட்டம், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் நமச்சிவாயம், பழனி ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.
News October 31, 2025
கடலூர்: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 31, 2025
உதவித்தொகை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற <


