News October 31, 2025
வேலூர்: கார் மோதி ஏசி மெக்கானிக்காக பலி

வேலுார் அரியூர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நரேஷ் (எ) விக்கி (24) ஏசி மெக்கானிக்காக வேலை செய்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்துகுள்ளானது. இதில் நரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேலுார் தெற்கு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
வேலூருக்கு வருகை தந்த துணை முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (அக்.31) வேலூர் கோட்டை மைதானத்தில் ஆய்வு செய்தார். ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News October 31, 2025
வேலூரின் அழியா சின்னம் இதுதான்!

வேலூரின் அழியாத சின்னமான வேலூர் கோட்டை, 16-ம் நூற்றாண்டில் குச்சி பொம்முன நாயக்கரால் கட்டப்பட்டது. இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற சிறப்பை பெற்ற இக்கோட்டையின் 3 பக்கமும் மட்டுமே தண்ணீர் உள்ளது. இக்கோட்டை, 133 ஏக்கர் பரப்பளவும், 191 அடி அகலமும் கொண்ட அகழிக்கோட்டையாக அமைந்துள்ளது. மேலும், இக்கோட்டைக்குள் ஒரு கோயில், தேவாலயம், பள்ளிவாசல் அமைந்துள்ளது.
News October 31, 2025
வேலூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


