News October 31, 2025

பழனி: மாற்றுத்திறனாளிகளுக்கு கவனத்திற்கு!

image

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகாக்களில் இதுவரை அடையாள அட்டை, ரயில் & பஸ் பாஸ் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் இன்று (31.10.2025) காலை 9 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் நேரத்தில் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைக்கு 5 புகைப்படம், ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை, பஸ்/ரயில் பாஸுக்கு 3 புகைப்படம், ஆதார், மாற்றுத்திறனாளர் அட்டை தேவையாகும்.

Similar News

News October 31, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (அக். 30) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படவுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்டோபர் 31) பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தெரியாத நபர்களிடமிருந்து வரும் QR கோடுகளை ஸ்கேன் செய்யாமல், பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 31, 2025

திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!