News October 31, 2025
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் தீவிர கண்காணிப்பு!

அதிவேக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த, கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் திரையுடன் 8 இடங்களில் ஏஐ கேமரா பொருத்தப்பட உள்ளது. விதிமீறல் வாகன எண்கள் திரையில் காணப்படும். வேகம், ஹெல்மெட், சீட் பெல்ட் மீறல்கள் தன்னிச்சையாக பதிவு செய்யப்படும் தற்போது இவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார். மேலும்மேம்பாலத்தில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறை
Similar News
News October 31, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (31.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க அழைப்பு!

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை மாநகர குற்ற பிரிவில் ‘செட் இ பேமெண்ட்’ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரமாக உள்ள ஆவணங்களுடன் கோவை மாநகர குற்றப்பிரிவு-1ல் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பைப்பாஸ், ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


