News October 31, 2025
ஸ்டாலினை சீரியஸாக எடுக்க வேண்டாம்: கவுதமி

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என CM ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி பேசியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அவர், அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தைக் காப்பாற்ற இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் சரியான தேர்வு எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
Similar News
News November 1, 2025
செங்கோட்டையன் நீக்கம்.. EPS-ஐ கண்டித்த சசிகலா

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கிய EPS-ற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது என்றும் இதுபோன்ற மனப்பாங்கு திருத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைவதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை திமுகவுக்கு மறைமுக உதவி செய்பவர்களாகவே கருதமுடியும் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
News November 1, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறுகிறது

தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அதிகரித்தே வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 22 கேரட் தங்கம் சவரன் ₹87,600 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து அக்.16-ல் ₹95,200-ஐ தொட்டது. அடுத்த 2 வாரம் குறைந்துவந்து இன்று ₹90,400-ல் நிற்கிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டிக் குறைப்பு, USA-சீன உடன்பாடு போன்ற காரணங்களால் சற்றே குறைந்தாலும், டிசம்பர் வரை பெரிதாக விலைக் குறைய வாய்ப்பில்லையாம்.
News October 31, 2025
திறனாய்வு தேர்வு: செவ்வாய்க்கிழமையே கடைசி!

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.


