News October 31, 2025
ஹிந்து மதம்: JD வான்ஸ் சர்ச்சை கருத்து!

USA-வின் குடியேற்ற சட்டங்கள் குறித்து இந்திய வம்சாவளி பெண்ணுடன் நடந்த <<18155827>>விவாதத்தின்<<>> போது, JD வான்ஸ் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வான்ஸின் மனைவி ஹிந்து என்பதை சுட்டிக்காட்டிய பெண், குழந்தைகளுக்கு எந்த மதம் குறித்து சொல்லி தருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு வான்ஸ், தனது மனைவி உஷா, ஹிந்து மதத்தில் இருந்து மாறி, கிறிஸ்தவராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
திமுக பிரிவினையை ஏற்படுத்துகிறது: தமிழிசை

நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை திமுக செய்வதாக தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக பேசுவதாகவே PM மோடி குறிப்பிட்டதாகவும், அது திமுக குறித்து வைக்கப்பட்ட விமர்சனமே தவிர தமிழர்கள் மீது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிஹாரிகள் அறிவில்லாதவர்கள், தமிழர்களின் வேலையை பறிப்பவர்கள் என்று கே.என்.நேரு பேசியதை தமிழிசை சுட்டிக்காட்டினார்.
News October 31, 2025
காதல் கைகூட செய்ய வேண்டிய வழிபாடு!

நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
News October 31, 2025
3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.


