News October 31, 2025
நீலகிரி: சாய்பாபா பெயரில் பெண்ணிடம் மோசடி!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுசி(37) என்பவரை ஏமாற்றிய வழக்கில் ராஜ்குமார்(46) என்பவர் கைது செய்யப்பட்டார். சுசியின் வீட்டை நிதி நிறுவன கிளை அலுவலகமாக போக்கியத்திற்கு எடுப்பதாக கூறி, ரூ.6.24 லட்சம் பெற்றும் பணம் திருப்பி தரவில்லை. புகாரின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் நிதி நிறுவனம் மட்டுமின்றி சாய்பாபா பெயரில் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.
Similar News
News November 1, 2025
நீலகிரி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 1, 2025
அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் தொல்லை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாந்தநாடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 வீடுகளின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்தது. இதையடுத்து பகல் நேரத்திலேயே இந்த கிராம குடியிருப்பு பகுதியில் கரடி உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 1, 2025
நீலகிரி: லஞ்சம் கேட்டால்.. CALL பண்ணுங்க

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது.எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசினார். நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


