News October 31, 2025

மயிலாடுதுறை: குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

image

சீர்காழி தென்பாதி வஉசி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (48). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருவேங்கடம் பிள்ளை குளத்தில் சங்கர் தண்ணீர் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News October 31, 2025

பொறுப்பு அமைச்சரை வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மெய்யநாதன் வருகை தந்தார். அவரை குத்தாலம் முன்னாள் திமுக எம்எல்ஏவும் திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளருமான குத்தாலம் அன்பழகன் நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது குத்தாலம் பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளார்.

News October 31, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<> HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 31, 2025

மயிலாடுதுறையில் நாளை இலவச மாதிரி தேர்வு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (நவ.,1) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. மாணவர்கள் மாதிரி தேர்வில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!