News October 31, 2025
நாகை: ஆன்மீக சுற்றுலா அறிவிப்பு

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்கள் சப்த விடங்க தலங்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர். வரும் நவ.9-ம் தேதி தொடங்கி நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய திருத்தலங்களுக்கு செல்லும் இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக ரூ.1800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/T1wvCrYPR7mq3D3U8 வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News October 31, 2025
நாகை: விவசாயிகள் வங்கி கணக்கில் 218 கோடி!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் குருவை நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை, 19,142 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 218 கோடியே 79 இலட்சத்து 7 ஆயிரத்து 89 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
நாகை: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 31, 2025
கீழ்வேளூர்: இரவு காவலர் பணிக்கு நேர்காணல்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடத்திற்கு இணைய வழியாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு வரும் நவ.3-ம் அன்று காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என ஒன்றிய ஆணையர் ரேவதி தெரிவித்துள்ளார்.


