News October 31, 2025
புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 175 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மீதமுள்ள பணியிடங்களை மட்டும் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தியால்பேட்டை திட்ட அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Similar News
News October 31, 2025
புதுச்சேரி: கவர்னரிடம் கோரிக்கை மனு

மோந்தா புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதி மக்களுக்கு போதுமான உதவி வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ், புதுச்சேரி ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ் நாதன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
News October 31, 2025
புதுச்சேரி: மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து

புதுச்சேரி, காவல்துறை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்தந்த காவல் நிலையங்களில், மக்கள் குறை தீர்வு நாள் முகாம் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, காவல் நிலையங்களில் நடைபெற இருந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
புதுச்சேரி: நாளை விடுதலை நாள் விழா அணிவகுப்பு

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை (நவம்பர் 1) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை நடைபெறும் விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்ற உள்ளார்.


