News October 31, 2025
ராமதாஸுக்கு திமுக அழைப்பு

அப்பா – மகன் என பிரிந்திருக்கும் பாமகவில், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது. NDA கூட்டணியில் இணைய அன்புமணி விரும்புவதாகவும், DMK உடன் ராமதாஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பாமக சார்பில் ராமதாஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது உள்கட்சியில் மட்டுமின்றி, திமுக கூட்டணியிலும் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News October 31, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

ராஜராஜசோழனின் சதய விழாவையொட்டி தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை என்பதால் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது. மழை விடுமுறையை ஈடுகட்ட சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அங்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்படும். சனிக்கிழமை என்பதால், பிற மாவட்டங்களில் இயல்பாகவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறையே!
News October 31, 2025
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க செம்ம TIPS!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உங்கள் அழகை மறைக்கிறதா? கவலை வேண்டாம். இதற்கு அருமையான Tip ஒன்று இருக்கிறது. வெள்ளரிக்காயையும், கேரட்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறவிடுங்கள் காய்ந்த பின் சோப்புக்கு பதிலாக கடலை மாவு கொண்டு கழுவுங்கள் வாரத்திற்கு 2 முறை செய்து வர முகத்தில் உள்ள புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும். SHARE THIS.
News October 31, 2025
செங்கோட்டையன் அடுத்து என்ன செய்வார்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பின்வரும் 4-ல் ஏதாவதொரு முடிவை செங்கோட்டையன் எடுக்கக் கூடும்: 1)OPS, சசி, டிடிவி ஆகியோருடன் இணைந்து புதிய அணியை உருவாக்கலாம். 2) பாஜக (அ) வேறு கட்சியில் இணையலாம்: ஏற்கெனவே அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், இதற்கு வாய்ப்புள்ளது 3) புதிய கட்சி தொடங்கலாம்: நடைமுறையில் வெற்றிபெறுவது கடினம். 4) EPS உடன் சமாதானம் – இதை செய்தால் முதலுக்கே மோசமாகும். உங்க கணிப்பு?


