News October 31, 2025
ஓய்வு பெறுகிறாரா ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி?

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக, ஓய்வில் இருந்தார். பின்னர், இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடினார். 5 ரன்களிலேயே பெவிலியன் திரும்பிய அலிசாவுக்கு, ஆஸி.,வின் தோல்வி பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இதுவே தனது கடைசி ODI உலகக் கோப்பை போட்டி என அவர் தெரிவித்துள்ளார். இது அலிசாவின் ஓய்வுக்கான சமிக்ஞை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக EPS அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் EPS அறிவுறுத்தியுள்ளார்.
News October 31, 2025
இந்த வித்தியாசமான பூச்சிகளை பார்தததுண்டா?

ஒவ்வொரு பூச்சிக்கும் தனித்துவமான வடிவம், வண்ணம் உண்டு. இவை, அளவில் சிறியதாக இருந்தாலும், இயற்கையில் மிக முக்கியம் பங்கு வகிக்கின்றன். மலர்கள் மலர, மண் வளம் பெருக, உணவு சங்கிலியை சமநிலைப்படுத்துவது உள்ளிட்டவைகளில் பெரிதும் உதவுகின்றன. மிகவும் வித்தியாசமான அரிய பூச்சிகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். உங்களுக்கு பிடித்த பூச்சி எது?
News October 31, 2025
மணல் கொள்ளை வழக்கு: ED-க்கு ஐகோர்ட் கேள்வி

TN-ல் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக ED தொடர்ந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, மணல் கொள்ளை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிய TN DGP-க்கு எப்படி உத்தரவிட முடியும் என ED-க்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மணல் குவாரிகளில் ₹4,730 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதற்கு ஆதாரம் உள்ளதாக ED தெரிவித்த நிலையில், 3 வாரங்களில் பதிலளிக்க TN அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


