News October 31, 2025

இளம்பரிதிக்கு ஸ்டாலின் வாழ்த்து

image

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள இளம்பரிதிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையால் தமிழக சாம்பியன்களின் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தை சேர்த்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் செஸ்ஸில் சூரியன் உதிக்கும் போது, திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் பல முத்துகள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 31, 2025

I AM BACK.. ஸ்டைலிஷ் லுக்கில் அஜித்

image

மேலே உள்ள புகைப்படங்களை பார்த்து ‘பில்லா 3’ ஷூட்டிங் என்று நினைத்துவிட வேண்டாம். ஆங்கில இதழ் ஒன்றுக்காக மாஸ் & கிளாஸ் கலந்த ஸ்டைலிஷ் ஆன லுக்கில் அஜித் போட்டோஷூட் எடுத்துள்ளார். இதற்கு ஃபயர் விடும் அவரது ரசிகர்கள் SM-ல் ‘THALA IS BACK’ என்று டிரெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.

News October 31, 2025

பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்டக்கூடாது: HC

image

<<18121841>>பள்ளிக்கரணை<<>> சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகளை அனுமதிக்கக்கூடாது என அதிமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை HC, SC உத்தரவை பின்பற்றாமல் கட்டுமானத்தை CMDA அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, குடியிருப்பு கட்டும் பணிகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தியது. இதற்கு, சதுப்பு நிலத்தின் எல்லையை தீர்மானிக்க ஆய்வு நடக்கிறது, 2 வாரங்களில் பணிகள் முடியும் என TN அரசு பதிலளித்துள்ளது.

News October 31, 2025

இது வேற மாதிரி போலீஸ்

image

பிரேசிலின் வடகிழக்கே அமைந்துள்ள மராஜோ தீவில் உள்ள சோர் நகரில், காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணிகளுக்கு, கார்களோ அல்லது குதிரைகளோ பயன்படுத்துவதில்லை. மாறாக எருமைகளில் சவாரி செய்கிறார்கள். வாகனங்கள் ஈரநிலங்கள் வழியாக எளிதாகச் செல்ல முடியாததால், எருமைகளை பயன்படுத்துகின்றனர். ரோந்து பணிக்கு, எருமைகளைப் பயன்படுத்தும் உலகின் ஒரே போலீஸ் படை இவர்கள்தான். “எருமை ரோந்து” பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!