News October 31, 2025

அதானி, அம்பானிக்காக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி

image

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar News

News October 31, 2025

கரூரில் CBI அதிகாரிகள் தீவிர விசாரணை

image

கரூர் சம்பவத்தை CBI அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற CBI அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள டீக்கடையில் விசாரணை செய்த அவர்கள், CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். விஜய் பேசிய இடத்தின் அமைப்பு, பரப்பு போன்றவற்றை நவீன கருவிகளுடன் முப்பரிமாண கோணத்தில் பதிவு செய்த அதிகாரிகள், அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

News October 31, 2025

₹1000-ல் குழந்தையின் Future-ஐ பாதுகாக்கும் திட்டம்

image

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். <>enps portal<<>>-க்கு சென்று திட்டத்தில் சேருங்கள். எல்லாருக்கும் பயன்படும், SHARE THIS.

News October 31, 2025

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்! WARNING

image

Cakes, chips, cookies, crackers, fried foods, margarine & ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் இந்தியர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில், இவ்வகை உணவுகளில் நிறைந்திருக்கும் Glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே!

error: Content is protected !!