News October 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
Similar News
News October 31, 2025
மகனை குடும்பத்துடன் கொன்ற தந்தைக்கு தூக்கு!

கேரள மாநிலம் இடுக்கியில், கொலை வழக்கில் 82 வயது முதியவரான ஹமீத்துக்கு மரண தண்டனை விதித்து தொடுபுழா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் ஹமீத் சொத்து தகராறில், உறங்கி கொண்டிருந்த தனது மகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளை எரித்து கொலை செய்தார். வழக்கு விசாரணையின் போது, இந்த கொலை அரிதிலும் அரிதானது என்ற பிரிவுக்குள் வருவதாக கூறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
News October 31, 2025
பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது PHOTO❤️❤️

பெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் அபிஷன் கரம் பிடித்தார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த அபிஷன், தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
டிரம்ப்புக்கு ஆப்பு வைத்த சொந்த கட்சியினர்

பிற நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரிகளுக்கு எதிராக 3வது முறையாக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் டிரம்ப்பின் சொந்த கட்சியினர்(குடியரசு கட்சி) 4 பேர் அவருக்கு எதிராக வாக்களித்திருப்பதுதான் ஹைலைட். ஆனால் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் Veto அதிகாரம் அதிபரிடம் இருக்கிறது. இதனால் டிரம்ப் இதனை நிராகரிப்பார், இது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாது என கூறப்படுகிறது.


