News October 31, 2025

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள்!

image

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தளங்களை ரசிப்பதோடு மட்டுமின்றி, இயற்கை அழகையும் கண்டு ரசிப்பதற்காகத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து புகைப்படம் எடுப்பதும், ஆபத்து உணராமல் நடந்து கொள்வதும் அதிகரித்துள்ளது. தலைக்குந்தா பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

பந்தலூர்: சாலையோர பள்ளத்தில் சிக்கிய சிலிண்டர் லாரி!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கு ஈரோடு பகுதியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிய லாரி ஒன்று, எருமாடு பகுதிக்கு சென்றது. அப்போது மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க, முற்பட்டபோது சாலையோர பள்ளத்தில் லாரி இறங்கியது. ஓரப்பகுதியை ஒட்டி மேடுபாங்கான இடமாக இருந்ததால் பெரிய அளவிலான ஆபத்து ஏற்படவில்லை.

News October 31, 2025

நீலகிரியில் நாளை கிராம சபை கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட வரவு செலவு அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்துக் ஒப்புதல் பெற வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

News October 31, 2025

நீலகிரி: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!