News October 31, 2025

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

image

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.

Similar News

News October 31, 2025

திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர், பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை அளித்து இன்று (அக்.31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

திருச்சி: நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நபார்டு வங்கி நிதி சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆபிஸர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் வரும் நவ.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>> என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!