News October 31, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.30) இரவு 10 மணி முதல் இன்று (அக்.31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 31, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் நாளை (நவ.,1) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் குடிநீர், வருவாய்த்துறை, மின்சாரம், மீன்வளம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கு பெற உள்ள நிலையில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
புதுக்கோட்டை: கூலித் தொழிலாளி மர்ம மரணம்

புதுக்கோட்டை, அடப்பன்வயலை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் நார்த்தாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு பயணியர் நிழற்குடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 31, 2025
புதுக்கோட்டை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


