News October 31, 2025

சிவகங்கை ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

சிவகங்கை ரயில் எண்-16321/16322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் விரைவு ரயில் மதுரையில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 1, 6, 8,11, 13, 15 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய வழித்தட நிறுத்தங்களுடன் திருப்பி விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்தை இந்த அட்டவணைக்கு தகுந்தபடி அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News October 31, 2025

சிவகங்கை: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News October 31, 2025

சிவகங்கை: கட்டட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

image

மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் காளையார்கோவிலில் தங்கி கட்டிட வேலை பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 31, 2025

சிவகங்கை கிராமப்புற வங்கியில் வேலை வேண்டுமா… APPLY

image

சிவகங்கை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!