News October 31, 2025
ஆவடி மக்களே இன்றே கடைசி

மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான சொத்து வரியை இன்று (31.10.2025)க்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரியாளர்கள் மாநகராட்சி மையங்கள், வரிவசூலியர்கள், க்யூஆர் கோட் அல்லது இணையதளம் https://tnurbanepay.tn.gov.in வழியாகவும் வரி செலுத்தலாம் என ஆவடி மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 31, 2025
திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
திருவள்ளூர்: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., கைது

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆபரேட்டர் சுகுமார் ஆகியோர் வாகனத்தை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். தாராட்சி பகுதியைச் சேர்ந்த அஜித் குமாரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் நடந்த சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
News October 31, 2025
திருவள்ளூர்: மனித மிருகத்திற்கு சிறை..!

திருவள்ளூர் மாவட்டம் நயப்பாக்கம் சேர்ந்த யுவராஜ்29 கடந்த 2018-ல் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் யுவராஜை புழல் சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சாட்சியங்களின் குற்றம் நிரூபணமாகி குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறை ரூ.21,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


