News October 31, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமான பணி செய்து வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
ராணிப்பேட்டை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
ராணிப்பேட்டை வரும் துணை முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சிப்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, வருகிற 3ம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 31, 2025
ராணிப்பேட்டை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


