News October 31, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (அக். 30) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News October 31, 2025
ஹஜ் பயணம்.. ராம்நாடு கலெக்டர் அறிவிப்பு!

2026ல் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை. தகுதி வாய்ந்தவர்கள் www.hajcommittee.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
ராம்நாடு: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News October 31, 2025
ராம்நாடு: திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவாடானை (தா) கட்டுகுடி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி-க்கும் (23) சிவகங்கையை சேர்ந்த சரண்ராஜூக்கும் 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு காளீஸ்வரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 28ம் தேதி இரவு இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ராம்நாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.


