News October 31, 2025
இரவில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்ணும் ஆண்களே.. உஷார்!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் & ஆயுளை பாதித்து, விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறதாம். இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே!
Similar News
News November 1, 2025
பைசன் படத்துக்கு பாலிவுட் இயக்குநர் பாராட்டு

‘பைசன்’ படம் ஒரு முழுமையான அதிரடி படம் என்று பாலிவுட் முன்னணி இயக்குநர் ஹன்சல் மேத்தா பாராட்டியுள்ளார். திரை மொழியில் சாதியம், சுதந்திரம், வன்முறை, அடிமைத்தனம் ஆகியவற்றை தைரியமாக எடுத்துக் கூறியதற்காக மாரி செல்வராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு தெரியாத பல நடிகர்கள் இருந்தாலும், கதைக்கு தேவையான கதாபாத்திரங்களாக மாறி, அவர்கள் தன்னை ரசிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News November 1, 2025
காலையில் இதை செய்தால் சிறுநீரகம் செத்துபோகும்

➤காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது ➤தண்ணீரே அருந்தாமல் காபி, டீ குடிப்பது ➤சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது ➤வெறும் வயிற்றில் Pain Killer மாத்திரைகளை சாப்பிடுவது ➤உடற்பயிற்சி செய்த பின் தண்ணீர் அருந்தாமல் இருத்தல் போன்ற விஷயங்களை தொடந்து செய்தால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பலருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 1, 2025
KKR அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா?

KKR அணியின் புதிய ஹெட் கோச்சாக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, கொல்கத்தா அணியில் ரோஹித் சர்மா இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுக்கும் விதமாக, KKR அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானின் ஃபேமஸ் படமான ‘Don’ படத்தில் இடம்பெற்ற ‘Sun will rise tomorrow again ye toh confirm hai, but at (K)night’ என்ற வசனத்தை குறிப்பிட்டு, MI போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பதில் அளித்துள்ளது.


