News October 31, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.30) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
சேலத்தில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப் பட்டியை சேர்ந்த சங்கர் மகள் இந்துமதி (19). இவர் அரியானுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த.28 மாலை,இந்துமதிக்கும், அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வேதனை அடைந்த இந்துமதி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 31, 2025
சேலம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
சங்ககிரி அருகே நொடியில் பறிபோன உயிர்!

நாமக்கல்லை சேர்ந்த தினேஷ்குமாா் தனது நண்பரான சங்ககிரியை ஒழுகுபாறையை சோ்ந்த முனுசாமியுடன் (40) டூவீலரில் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றாா். வைகுந்தம் சுங்கச் சாவடிக்கு முன் உள்ள மேட்டுக்கடை பகுதியில் சென்றபோது,டூவிலர் பின்பக்க டயா் வெடித்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முனுசாமி உயிரிழந்தாா்.தினேஷ்குமாா் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


