News October 30, 2025

பசும்பொன்னில் தலைவர்கள் மரியாதை (PHOTOS)

image

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், CM ஸ்டாலின் மற்றும் EPS, சீமான், வைகோ, TTV, OPS, தவெக சார்பில் N.ஆனந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புகைப்படங்களை மேலே SWIPE செய்து பார்க்கவும்.

Similar News

News October 31, 2025

10th பாஸ் போதும்.. மத்திய அரசில் வேலைவாய்ப்பு

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) வெஹிக்கிள் மெக்கானிக் உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10, ITI தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

சற்றுநேரத்தில் மொத்த நாடும் திரும்பி பார்க்கும் அறிவிப்பு

image

தற்போதைய அரசியல் சூழலில், அனைத்து மாநிலங்களும் பிஹார் தேர்தலை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்நிலையில், NDA கூட்டணி, இன்று காலை 9.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இதில், மகளிர், இளைஞர்கள், மாணவர்களை கவரும் வகையிலும் பல அறிவிப்புகள் இடம்பெறலாம் என தெரிகிறது. தமிழகத்திலும் விரைவில் தேர்தல் வரவுள்ளதால், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளும் இத்தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

News October 31, 2025

முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குக: GK மணி

image

தென்தமிழகத்தை மையமாக கொண்டு வாழக்கூடிய முக்குலத்தோர் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் உள்ள GK மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், வன்னியருக்கு 15% ஒதுக்கீட்டை பாமக தலைவர் அன்புமணி கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!