News October 30, 2025
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று (அக் 30) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களின் நிலம், நீர் பாசனம், உரம், மின்சாரம் மற்றும் விலை தொடர்பான குறைகளை முன்வைத்தனர். அவர்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News October 31, 2025
தி.மலை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 31, 2025
தி.மலை: அண்ணாமலையார் கோயில் முக்கிய அறிவிப்பு

தி.மலை அருணாசலேசுவரர் கோயிலில் நவ.4-ம் தேதியன்று அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்று பிற்பகல் 3 மணி-மாலை 6 மணி வரை நடை சாற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு தரிசன அனுமதி வழங்கப்படும். அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவதால், 4 மற்றும் 5-ம் தேதிகளில் முன்னுரிமை தரிசனம் வழங்கப்படமாட்டாது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
தி.மலை: இன்று இதை மிஸ் பண்ண வேண்டாம்!

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.31) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, விபிஎஸ்சி கட்டிடம்-மேல்கச்சிராப்பட்டு, எம்ஆர்வி மஹால்-தச்சூர், ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில்-கடம்பை, விபிஆர்சி கட்டிடம்-செய்யாற்றை வென்றான், ரஜினி மஹால்- காந்தபாளையம், ஆர்.ஒய்.எப் மண்டபம்- ஆவூர் ஆகிய இடங்களில் நடைபெறும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


