News October 30, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல்லில் இன்று (அக்.30) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தேசிங்கன்(86681 05073) ராசிபுரம்: கோவிந்தசாமி (94981 69110), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: டேவிட் பாலு (94865 40373), செல்வராசு (99944 97140), வேலூர்: ரவி (94981 68482) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
Similar News
News October 31, 2025
நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் நவ.03 மற்றும் 4 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
நாமக்கல்லில் முட்டை விலை நிலவரம்!

நாமக்கல்லில் இன்று (அக்.31) முட்டை விலையில் பெரிய மாற்றமின்றி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.40 என நீடிப்பதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் தேவைக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 31, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு காவல்துறையின் தகவல் நம்முடைய பாஸ்போர்ட், ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டைகள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தேவை இல்லை. தற்பொழுது services.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்து உரிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு!


