News October 30, 2025
மாதவிடாய் லீவுக்கு போட்டோ கேட்ட அவலம்!

மாதவிடாய் என்பதை உறுதிபடுத்த பெண்களிடம் போட்டோ கேட்ட சம்பவம் ஹரியானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MD பல்கலை.,யில் கவர்னர் வந்த போது, மாதவிடாய் என்பதால் 3 பெண் தூய்மை பணியாளர்கள் விடுப்பு கேட்டுள்ளனர். அதற்கு சூப்பர்வைசர் போட்டோ கேட்டுள்ளார். சானிடரி நாப்கின் போட்டோ அனுப்பியும் லீவ் கொடுக்க அவர் மறுத்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
தொப்பையை குறைத்து சிக்குனு ஆக இத பண்ணுங்க!

Flutter kicks தொப்பையை கணிசமாக குறைக்கும் ★தரையில் படுத்து, கைகளை இடுப்புக்கு அடியில் வைக்கவும். வயிற்று தசைகளை இறுக்கமாக வைத்து, இரு கால்களையும் சிறிது மேலே உயர்த்தி வைக்கவும். இப்போது, வலது காலை கீழே இறக்கும்போது இடது காலை மேலே உயர்த்தவும். இதே போல, காலை மாற்றி செய்யவும். இந்த அசைவுகளை வேகமாக செய்யவும். மொத்தமாக 3 செட்களில் ஒவ்வொரு காலையும் 10-15 முறை செய்யலாம்.
News October 31, 2025
திமுகவுடன் கூட்டணி… அரசியலில் புதிய பரபரப்பு

அன்புமணிக்கு பதிலாக பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட தன் மகள் ஸ்ரீகாந்தியை, 2026 தேர்தலில் தருமபுரியில் களமிறக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் உத்தரவின்பேரில், திமுகவுடன் கூட்டணி பேச்சை ஜி.கே.மணி தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைந்து, 5 MLA-க்கள் வென்றாலே, கட்சியை தன் பக்கம் தக்க வைத்து விடலாம் என அவர் கணக்கு போட்டு இருக்கிறாராம்.
News October 31, 2025
ராமதாஸுக்கு திமுக அழைப்பு

அப்பா – மகன் என பிரிந்திருக்கும் பாமகவில், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது. NDA கூட்டணியில் இணைய அன்புமணி விரும்புவதாகவும், DMK உடன் ராமதாஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பாமக சார்பில் ராமதாஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது உள்கட்சியில் மட்டுமின்றி, திமுக கூட்டணியிலும் பேசுபொருளாகியுள்ளது.


