News October 30, 2025
காஞ்சிபுரம்: திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் அவசர கூட்டம்

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் நவம்பர் 4ம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திமுக நிர்வாகிகள் கூட்டம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் காணொளி வழியாக கலந்து கொண்டார்.
Similar News
News October 31, 2025
பிள்ளைப்பாக்கத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் இன்று (அக்.31) திருப்பெரும்புதூர் ஒன்றியத்திலுள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சிவன் கோயில் அருகில் காலை நேரத்தில் தொடங்கும். பொதுமக்கள் தங்களது மனுக்கள் மற்றும் குறைகளை அளித்து உடனடி தீர்வுகளை பெறலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
News October 31, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இதில் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். இந்தக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
News October 31, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர். 30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


