News October 30, 2025

ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

image

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Similar News

News October 31, 2025

கொரோனாவை விட கொடுமையான காற்று மாசு

image

உலக அளவில் 2024-ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். குறிப்பாக, இந்தியாவிலும் பல உயிர்களை காற்று மாசு கொன்று வருவதாக AIIMS முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக டெல்லியில் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமானதாக செல்வதால், மக்கள் அவதியுற்றுள்ளனர்.

News October 31, 2025

அதானி, அம்பானிக்காக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி

image

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News October 31, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!