News October 30, 2025
கொத்து கொத்தா கொட்டும் முடி ஒரே வாரத்தில் சரியாக TIPS!

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.
Similar News
News October 31, 2025
அதானி, அம்பானிக்காக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News October 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
News October 31, 2025
சச்சின் முதல் அஸ்வின் வரை.. வாழ்த்து மழையில் மகளிரணி

நடப்பு சாம்பியனான ஆஸி.,வை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது இந்திய மகளிர் அணி. முதல் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்து மழைகளை பொழிந்துள்ளனர். சச்சின், யுவராஜ் சிங், கம்பீர், ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவும் மகளிர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


