News October 30, 2025
BREAKING: CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

2025 – 2026 கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 17.02.2026 அன்று பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது.
Similar News
News October 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
News October 31, 2025
சச்சின் முதல் அஸ்வின் வரை.. வாழ்த்து மழையில் மகளிரணி

நடப்பு சாம்பியனான ஆஸி.,வை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது இந்திய மகளிர் அணி. முதல் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்து மழைகளை பொழிந்துள்ளனர். சச்சின், யுவராஜ் சிங், கம்பீர், ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவும் மகளிர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
News October 31, 2025
ஆப்கனுக்கு இந்தியா முழு ஆதரவு

பாக்., – ஆப்கன் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே ஆப்கனுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கனின் இறையாண்மை, சுதந்திரம் & ஒருமைப்பாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்., தூண்டி விடுவதை இந்தியா உள்பட எந்த அண்டை நாடுகளும் ஏற்காது என்றும் கூறியுள்ளது.


