News October 30, 2025
BREAKING: திருவள்ளூர்: நவம்பர் 1-ல் பள்ளிகள் இயங்கும்!

மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த அக்.28ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
திருவள்ளூர்: மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ.05) அன்று காலை 10.30 மணிக்கு துவக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
ஆவடி மக்களே இன்றே கடைசி

மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான சொத்து வரியை இன்று (31.10.2025)க்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரியாளர்கள் மாநகராட்சி மையங்கள், வரிவசூலியர்கள், க்யூஆர் கோட் அல்லது இணையதளம் https://tnurbanepay.tn.gov.in வழியாகவும் வரி செலுத்தலாம் என ஆவடி மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News October 30, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


