News October 30, 2025
வரலாற்றை திரும்பி பாருங்கள் ராகுல்: அமித்ஷா

வாக்குகளை பெற PM மோடி டான்ஸ் கூட ஆடுவார் என <<18139805>>ராகுல்<<>> பேசியதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வரலாற்றை திரும்பிப் பார்த்தால், PM மோடியை அவமதிக்கும் போதெல்லாம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், PM மோடி மற்றும் அவரது தாயாரை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News October 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 31, ஐப்பசி 14 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News October 31, 2025
கார்த்திகாவுக்கு பைசன் படக்குழு அளித்த வெகுமதி

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ், கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அப்போது, கார்த்திகாவுக்கு ₹5 லட்சத்தையும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு ₹5 லட்சம் என மொத்தம் ₹10 லட்சத்தை ‘பைசன்’ படக்குழு சார்பாக மாரி அளித்தார்.
News October 31, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


