News October 30, 2025

தி.மலையில் இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

image

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மலை மக்கள் இனி தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு <>இந்த இணையதளம்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாசில்தார் அலுவலகத்தை நாடலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News October 30, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று (அக் 30) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களின் நிலம், நீர் பாசனம், உரம், மின்சாரம் மற்றும் விலை தொடர்பான குறைகளை முன்வைத்தனர். அவர்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News October 30, 2025

தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!