News October 30, 2025
வெளுக்கும் ஆஸ்திரேலியா… தடுமாறும் இந்தியா

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி வருகிறது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் 66 பந்துகளில் 83 ரன்கள் விளாசியுள்ளார். 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க வேண்டிய அவர், நூலிழையில் தப்பினார். முன்னதாக கிராந்தி கவுட் பந்துவீச்சில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்னுக்கு அவுட்டாகினார்.
Similar News
News October 31, 2025
அதிக தங்க நகை அணிந்தால் ₹50,000 அபராதம்!

அதிக தங்க நகை அணிவதை நம்மூரில் கௌரவமாக பார்ப்பார்கள். அதிக மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆனால், நகை இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள் என்று யோசித்துள்ளது ஹரியானாவில் உள்ள காந்தார் கிராமம். அதனால், அதிக தங்க நகை அணிந்தால் அங்கு ₹50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. சுப தினத்தில் கூட கம்மல், மூக்குத்தி, தாலி மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதற்கு பெண்கள் ஒத்துக்கொண்டது தான் ஆச்சரியம்.
News October 31, 2025
ராசி பலன்கள் (31.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 31, 2025
விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து இயக்குநர் ரவி அரசு விலகிய நிலையில், இயக்கும் பணியை விஷால் கையிலெடுத்தார். இந்நிலையில், இயக்குநர் சங்கமும், FEFSI அமைப்பும் சேர்ந்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. ரவி அரசுவிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெறாமல் படத்தை விஷால் இயக்க கூடாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.


