News October 30, 2025
BREAKING: கூட்டணியை அறிவித்த டிடிவி, ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஒன்றாக சபதம் ஏற்றுள்ளனர். மேலும், புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக அறிவித்த TTV, சசிகலா எப்போதும் எங்களுடன் தான் இருப்பார்; காலதாமதத்தால் எங்களுடன் சேர்ந்து அவரால் இங்கு வரமுடியவில்லை. துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதால் 3 பேரும் ஒன்றாக இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News November 1, 2025
துரோகத்திற்கு EPS-க்கு நோபல் பரிசு தரலாம்: KAS

துரோகம் செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கில் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்காக கிடைத்த பரிசு தான், கட்சியில் இருந்து நீக்கம் என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், துரோகம் செய்வதில் இபிஎஸ்-க்கு நோபல் பரிசு தரலாம் என்றும் கடுமையாக சாடினார்.
News November 1, 2025
BREAKING: கண்ணீர் விட்ட செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதால் கண்ணீர் சிந்தினேன், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்று செங்கோட்டையன் வேதனையுடன் கூறியுள்ளார். MGR, ஜெயலலிதா என அனைத்து தலைவர்களிடமும் விசுவாசமாக இருந்த தன்னை நீக்கும் முன், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக இபிஎஸ், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் தான் எனவும், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
News November 1, 2025
திமுகவின் B டீமா? செங்கோட்டையன் விளக்கம்

திமுகவின் ‘B’ டீமாக தான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருப்பதாக செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சியில் நீண்ட காலமாக இருந்த தன்னை ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம் செய்திருப்பது வேதனையளிப்பதாக கூறினார். இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி அடைவதால் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததாக கூறினார்.


