News October 30, 2025
சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 31, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (30.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News October 30, 2025
கார்த்திகாவை நேரில் பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்

பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் மகளிர் பிரிவில், கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா தங்கம் வென்றிருந்தார். அவரையும், அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், பாராட்டும் வகையில் இயக்குநர் பைசன் படக்குழு சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக மொத்தம் 10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று கார்த்திகாவிடம் வழங்கினார்.
News October 30, 2025
சென்னை: ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


