News October 30, 2025

குமரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

குமரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில்<> LINK<<>>-ல் தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 31, 2025

குமரி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

image

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை கூலி தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49) . 2 நாள் முன்பு இவருக்கும், அவரது மனைவி ஜிபிரியாபீவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சஜ்ஜார் ஜாஹீர் வீட்டின் அருகே விஷம் குடித்த நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.30) உயிரிழந்தார். கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.

News October 31, 2025

குமரி: 12th, முடித்தால் ரூ.40,00 சம்பளத்தில் வேலை., APPLY

image

குமரி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12வது / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும். நிரந்தர வேலை தேடுபவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 31, 2025

குமரி: பயிற்சி ஆசிரியரால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

image

பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் டேக்வாண்டோ மையத்தில் பயிற்சி ஆசிரியராக இருந்து பயிற்சி வழங்கி வந்துள்ளார். மதுரையில் நடந்த போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற போது ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

error: Content is protected !!